டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 9:30 AM GMT)

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் திறமையை வளர்க்கும் பொருட்டு சிவந்தி அறிவியல் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் குழுமம் சார்பில், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை இணைய வழியில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் 'விவசாயத்தில் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தங்களது கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி ஸ்கேன் செய்து பி.டி.எப். முறையில் 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் https://forms.gle/JXyMX7HPoszkWZES7 என்ற இணைப்பு வழியாக பதிவு செய்து பங்கேற்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், போட்டிகள் பற்றி விவரம் அறிய sivanthiscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 9566810078 என்ற வாட்ஸ்-அப் எண்ணிேலா தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் அறிவியல் குழும உறுப்பினர்கள் வாசுகி, ஜோதி ஸ்டெல்லா, துணை பேராசிரியர்கள் பூரணம், மரியஇருதய சுஜிதா, மோகனபிரியா, ஸ்ரீஜா ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story