ஜாக்டோ ஜியோ சார்பில்வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு


ஜாக்டோ ஜியோ சார்பில்வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில், கொடுவிலார்பட்டியில் வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு நடந்தது.

தேனி

தேனி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில், கொடுவிலார்பட்டியில் வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் செல்வம், கவுதம் அசோக்குமார், சீனிவாசன், பெரியசாமி, பேயத்தேவன் மற்றும் சண்முகவேல் ஆகியோர் பேசினர். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவரும், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவருமான முத்தையா விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட ஜாக்டோ ஜியோவின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story