தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில்இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சாயர்புரம்:
குலையன்கரிசல் அபிஷேகநாதர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி டி.எம்.பி. பவுண்டேஷன் குலையன்கரிசல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளைஅலுவலகமும், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பர்ஜோதிபால் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். வங்கி கிளை மேலாளர் சுந்தரமகாலிங்கம். டிஎம்.பி.பவுண்டேஷன் அதிகாரி சவுந்தரபாண்டியன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் சஞ்சய், டபர்னா ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள். இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை குலையன்கரிசல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளை மேலாளர் சுந்தரமகாலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.