அருந்ததியர் உறவின்முறை சார்பில்சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்:உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் பரபரப்பு
தேனி அல்லிநகரத்தில் அருந்ததியர் உறவின்முறை இளைஞரணி சார்பில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தேனி அல்லிநகரத்தில் அருந்ததியர் உறவின்முறை இளைஞரணி சார்பில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி தலைவர் அருந்தமிழரசு தலைமை தாங்கினார். இதில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்தும், சீமானை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது சிலர் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story