வனத்துறை சார்பில் நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை அதிகாரிகள் தகவல்


வனத்துறை சார்பில்   நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை   அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:45 AM IST (Updated: 18 Sept 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

வனத்துறை சார்பில் நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வனத்துறை சார்பில் நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் சபை கூட்டம்

வருவாய் துறையினர் சார்பில் வால்பாறை அருகில் உள்ள நெடுங்குன்று மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. இதில் நெடுங்குன்று மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை வசதி, மின் இணைப்பு வசதி, கழிப்பிட வசதி, குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். சாதி சான்றிதழ் வழங்குவது, வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் சபை கூட்டத்தில் பேசினார்கள். நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அடிப்படை வசதிகள்

வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் வனத்துறையின் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வால்பாறை தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் தணிகைவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் ஜெகதீசன், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story