அரசு சார்பில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு


அரசு சார்பில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
x

அரசு சார்பில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி

முத்தரையர் சிலைக்கு மாலை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது ஆண்டு சதய விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் முழு உருவச்சிலைக்கு அமைச்சர்கள் ேக.என்.நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story