தொழிலாளர் துறை சார்பில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் வழங்கினார்


தொழிலாளர் துறை சார்பில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் வழங்கினார்
x

தொழிலாளர் துறை சார்பில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

மதுரை


தொழிலாளர் துறை சார்பில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

தொழிலாளர்கள்

மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது, வீட்டுவசதி திட்டத்தின் கீழ் குடியிருப்பு ஒதுக்கீடு, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திருமணம், தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவி, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிட மரணம் ஆகியவற்றுக்கான நிவாரண தொகை, பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

நலத்திட்ட உதவிகள்

இதற்கிடையே, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தலைவர் பொன்குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர்கள் கார்த்திகேயன், மலர்விழி மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 31 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.54 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான குடியிருப்பு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்பட்டது. 331 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 362 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story