விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் தொகுதி செயலாளர் குட்டி, உடன்குடி ஒன்றிய பொருளாளர் ஜான்வளன், நகர செயலாளர் தவுபிக் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் மனுஸ்மிருதி புத்தகத்தை கட்சியினர் வினியோகம் செய்தனர்.


Next Story