தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில்வங்கி சேவை வாகனம் தொடக்கம்

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வங்கி சேவை வாகனத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நபார்டு நிதி உதவியுடன் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், பணம் பரிமாற்றம் செய்வதற்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கே சென்று சேவை செய்வதற்காக வங்கி சேவை வாகனம் வாங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ச.லீ.சிவகாமி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சு.கிருஷ்ணன், உதவி பொது மேலாளர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்






