தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கம் சார்பில் அரிமா ஆளுநரின் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவிகள் 30 பேர் சங்கத்தில் இணையும் விழா நடந்தது. விழாவுக்கு அரிமா மாவட்ட ஆளுநர் என்.கே.விசுவநாதன், கலையரசி விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். புனித திருச்சிலுவை மனையியல் கல்லூரியில் நடந்த விழாவில், கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியை ரூபா முன்னிலையில் 30 மாணவிகள் அரிமா சங்கத்தில் இணைந்தனர். எஸ்.டி.ஆர் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கண் பார்வை குறைப்புடைய மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் 100 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் 200 பேருக்கு உணவும், 4 பேருக்கு மிக்சியும், ஒருவருக்கு கிரைண்டர், மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் முதல் துணை ஆளுநர் பிரான்சிஸ் ரவி, முன்னாள் ஆளுநர் ஜே.கே.ஆர். முருகன், ஆனந்தராஜ், நெல்லையப்பன், ஜெயக்குமார், ரோசரி லூயிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், செயலாளர் எஸ்.தர்மராஜ், பொருளாளர் எஸ்.வி.பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.தெய்வநாயகம், சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.