திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில்காயாமொழியில் மரக்கன்று நடும் விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில்காயாமொழியில் மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:45 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் காயாமொழியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், 75-வது சுதந்திரதின அழுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, "எனது மண், எனது தேசம்" என்ற நிகழ்வினை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 48-ன் சார்பாக காயாமொழி சி.பா.ஆதித்தனார் மேல் நிலைப்பள்ளியில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டு, 5 தீர்மானங்கள் உறுதி மொழியாக எடுக்கப்பட்டது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவ மற்றும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வெளியப்பன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திர பொறுப்பாளர் இசக்கி, திருச்செந்தூர் வனவர் செந்தில்குமார், வன காப்பாளர் காளி ராஜன், முன்னாள் எல்லைப்பாதுகாப்பு படைவீரர் ரஞ்ஜித்குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆரோக்கிய ஜெயக்குமார், மறைந்த ராணுவ வீரர் மனைவி சித்திரைக்கனி, மறைந்த விடுதலைப் போரட்ட தியாகி சிவனைந்தபெருமாள் மகன் பாலகாமராஜ், சி.பா. ஆதித்தனார் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி மேலாண்மை குழு செயலாளர் சுந்தர் மற்றும் பள்ளி பழைய மாணவர்கள் செல்வகுமார், பாலாஜி, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பங்குப் பெற்ற அனைவருக்கும் தூத்துக்குடி நேரு யுவா கேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 48-ன் அமைப்பாளர் கவிதா மற்றும் சி.பா. ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளிபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளி மனோகர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story