காமராஜர் பிறந்தநாளில்மதுக்கடைகளை மூட வேண்டும்:நாடார் சங்கம் கோரிக்கை
காமராஜர் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நாடார் சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் 'காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினமும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் மதுபான பார்களை மூட வேண்டும். அரசு அலுவலகங்களில் காமராஜர் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும். அன்றைய தினம் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story