2-வது நாளாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மதிப்பீட்டு குழு ஆய்வு
2-வது நாளாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மதிப்பீட்டு குழு ஆய்வு நடத்தினா்
ஈரோடு
ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று புதுப்பிக்கும் வகையில் மதிப்பீட்டு குழுவினரின் 3 நாட்கள் ஆய்வு நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மதிப்பீட்டுக்குழு தலைவர் டாக்டர் பி.குணஷீலா தலைமையில் டாக்டர் தருண்குமார் ரவி, கே.ஸ்ரீகாந்த் ராஜூ ஆகியோர் துறை வாரியாக ஆய்வு செய்தனர். பிரசவ வார்டில் செய்யப்படும் பணிகள், மருத்துவ உதவிகள், வசதிகள் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர். இன்று (சனிக்கிழமை) ஆய்வு நிறைவுபெறுகிறது.
Related Tags :
Next Story