'நானோ யூரியா' உர பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
‘நானோ யூரியா’ உர பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
ஆனைமலை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டம் மூலமாக ஆனைமலை நெல் விவசாயிகளுக்கு நானோ யூரியா உரப்பயன்பாட்டின் நன்மையைச் செயல்முறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடி உரமாகவோ, மேல் உரமாகவோ இடும்போது 30 - 35 சதவிகித சத்துதான் பயிருக்கு பயன்படுகிறது. மீதமுள்ள 65 - 70 சதவிகித சத்து நிலத்தடி நீரை மட்டும் பாதிக்காமல் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. இந்த 65 - 70 சதவீத சத்து வீணாவதைத் தடுக்க நானோ யூரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு 125 லிட்டர் தண்ணீரில் 625 மி.லி திரவ நானோ யூரியாவைக் கலந்து சாதாரண விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் ஆய்வுகள் மூலம் யூரியாவை டிரோன் பயன்படுத்தி தெளிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இதனால் கூலி மற்றும் நேரம் மிச்சமாகும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 வரை அதிக லாபம் பெறும் வாய்ப்பும் உள்ளது என்று வேளாண்மை கல்லூரி மாணவர்கள், ஆனைமலை ஏ.டி.ஏ மற்றும் ஏ.ஓ. மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.