வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி  சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று வாரவிடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குவிந்தனர்.

இதையடுத்து அருவியின் நுழைவு பகுதியில் இருந்து வனத்துறை வேன் மூலம் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். அருவியில் குறைந்தளவே நீர்வரத்து இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.


Next Story