முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்


முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்லில் முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

காலி பதவியிடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 7 மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஊராட்சி தலைவர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

2 பேர் மனு தாக்கல்

புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 7-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி லட்சுமியிடமும், தொண்டைமான் ஊரணி ஊராட்சி தலைவர் பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நிர்மலா தேவியிடமும் மனு தாக்கல் செய்ய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் நாளான நேற்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்டத்தில் துருசுபட்டி, மேலத்தானியம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தலா ஒருவர் என 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் வருகிற 27-ந் தேதியுடன் முடிவடைகிறது. 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.


Next Story