வழிகாட்டி பலகையில் ஊர் பெயர் தவறாக உள்ளதால் பயணிகள் குழப்பம்


வழிகாட்டி பலகையில்  ஊர் பெயர் தவறாக உள்ளதால் பயணிகள் குழப்பம்
x

வழிகாட்டி பலகையில் ஊர் பெயர் தவறாக உள்ளதால் பயணிகள் குழப்பம், திருத்தி எழுத பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி உள்ளது. இந்தப் பேரூராட்சியில் புகழ் பெற்ற மகிஷாசுர மர்த்தினி தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்கு செல்லும் முன்பு வாளை வைத்து வணங்கியதால் கோவிலின் பெயர் வாள்வச்சகோஷ்டம் என்று ஆகியது. பின்னர் அதுவே ஊரின் பெயராகவும் மாறியது. இந்தநிலையில் தற்போது இந்த ஊரின் எல்லைப் பகுதியான கவியலூர் என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 'வாள்வச்சகோஷ்டம்' என்பதற்குப் பதிலாக 'வால்வச்சகோஷ்டம்' என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இது அந்த வழியாக செல்லும் பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஊர்பெயர் தவறாக உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளனர். எனவே பெயர் பலகையை உடனே திருத்தம் செய்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story