ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில்குட்டியுடன் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை


ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில்குட்டியுடன் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
x

ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் குட்டியுடன் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது

திருப்பூர்

ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் அரசு பஸ்சை குட்டியுடன் காட்டு யானை வழிமறித்தது.

பஸ்சை மறித்த யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே நேற்று ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காட்டு யானை குட்டியுடன் நடமாடியது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை திடீரென யானை மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார்.

படம் பிடித்தனர்

பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். ஆனால் யானை பயணிகளை எதுவும் செய்யவில்லை. இதனால் பயணிகள் சிலர் யானைகளை ெசல்போனில் படம் பிடித்தனர்.

யானை குட்டியுடன் அரசு பஸ்சை மறித்தபடி நின்றதால், நெடுஞ்சாலையில் வந்த எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 15 நிமிடம் ரோட்டிலேயே நின்ற காட்டு யானை பின்னர் குட்டியுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது.

பகல் நேரங்களிலேயே காட்டு யானைகள் அடிக்கடி நெடுஞ்சாலைக்கு வந்துவிடுவதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவேண்டும். யாரும் வனவிலங்குகள் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story