கடைசி நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்


கடைசி நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்
x

ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட கடைசி நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று தி.மு.க. சார்பில் 2 பேரும்,அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும்,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் என மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு பரிசீலனை இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9-ந் தேதியும்,வாக்கு எண்ணிக்கை 12 -ந்தேதியும் நடக்கிறது.


Next Story