அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை


அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் சரபேஸ்வரர், காலசம்ஹார பைரவர் ஆகியோர் தனி, தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். காலசம்ஹார பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கோரிக்கை தேங்காய் வழிபாடும் நடந்தது.


Next Story