கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனை


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது

மதுரை


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று உயர்ந்திருந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூவானது, 2500 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.1500-க்கும் குறைவாக விற்பனையானது.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திடீரென நேற்று பூக்களின் விலை உயர்ந்தது. இதுபோல், பிச்சி, முல்லை கிலோ ரூ.1200, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.200 என விற்பனையானது.

விலை அதிகம் இருந்தாலும் மக்கள் பூக்கள் வாங்க ஆர்வம் காட்டினர். புத்தாண்டு வரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story