கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈரோட்டில் ஸ்டார் விற்பனை அமோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈரோட்டில் ஸ்டார் விற்பனை அமோகமாக நடந்தது.
உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்க உள்ளனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதன்படி தற்போது கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசு பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரம் சற்று மந்தமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், மரங்கள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ரூ.80 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.