தசரா விழாவை முன்னிட்டுபாலக்காடு எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை


தசரா விழாவை முன்னிட்டுபாலக்காடு எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவை முன்னிட்டு பாலக்காடு எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளரும், தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான மா.பிரமநாயகம் சென்னை ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆகையால் நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரெயிலை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 2 ரெயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story