சுதந்திர தினத்தையொட்டி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தையொட்டி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
x

கோடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்த போது எடுத்த படம். 

தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

நீலகிரி

கோத்தகிரி: சுதந்திர தினத்தையொட்டி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொணவக்கரை, ஜக்கனாரை, கெங்கரை, தேனாடு, நடுஹட்டி, கோடநாடு, நெடுகுளா, குஞ்சப்பனை ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் கோடநாடு கிராம ஊராட்சி சார்பில் வெற்றிநகரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்பி காரி தலைமை வகித்தார். கோத்தகிரி தாசில்தார் கோமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சதீஷ் நன்றி கூறினார். நெடுகுளா கிராம ஊராட்சி சார்பில் கேர்கம்பையில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சுகுணா சிவா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதேபோல் ஜக்கனாரை கிராம ஊராட்சி சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ், கெங்கரை கிராம ஊராட்சியில் தலைவர் முருகன், நடுஹட்டி கிராம ஊராட்சியில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன், தேனாடு கிராம ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பனை கிராம ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், கொணவக்கரை கிராம ஊராட்சியில் தலைவர் ஹரிபிரியா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

1 More update

Next Story