சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டுஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்


சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டுஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
x

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கரூர்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நீதிமன்றம், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, சுங்ககேட் மில்கேட் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் நகர் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை தயாந்த் மற்றும் தாரணியும், 2-ம் பரிசான ரூ.7 ஆயிரத்தை பாலசந்தர் மற்றும் கிருத்திகாவும், 3-ம் பரிசான ரூ.5 ஆயிரத்தை கமலேஷ் மற்றும் சரண்யாவும் பெற்றனர்.சிறப்பு பரிசாக ரூ.ஆயிரத்தை உதயகுமார், சிவசக்திவேல், கோகுலகண்ணன், பிரதீப், சந்தியா, பிருந்தா, பூமிகா ஆகிய 7 பேர் பெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமாமணி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story