கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் வட்டம் தீவனூர் கிராமத்தில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த புராதன கற்கோவிலில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பெருமாள் கோவிலில் வருடந்தோறும் கிருஷ்ணஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விக்னேஷ்வரர் ஆராதனை, கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உறியடி திருவிழா
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் சாமி வீதியுலா மற்றும் திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் உறியடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமிகவுண்டர் செய்திருந்தார்.
Related Tags :
Next Story