பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சாதி, சமூகம், மதம் சார்ந்த எந்த முழக்கத்தையும் எழுப்பக்கூடாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது. இதை மனுதாரர் தரப்பினர் உறுதி செய்ய வேண்டும். மினி மாரத்தான் போட்டியின்போது முதலுதவி ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருக்கக்கூடாது.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் போட்டியை நடத்துபவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்பட நிபந்தனைகளுடன் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
=========