புரவி எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
திருப்பத்தூர் அருகே புரவி எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே புரவி எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு, சிறிய மாடு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 16 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் பங்கேற்ற பெரிய மாடுகளுக்கு தேவரம்பூர் விளக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டது. பெரிய மாடு பிரிவில் பரவை பகுதியை சேர்ந்த சோனைமுத்து பொன்பேத்தி முதல் பரிசும், பூக்கொள்ளையை சேர்ந்த காளிமுத்து ரித்தீஸ்வரன் 2-வது பரிசும், பரளியைச் சேர்ந்த வி.எம்.பிரதர்ஸ் 3-வது பரிசும், தேவரம்பூர் மாதவன் நினைவு குழு 4-வது பரிசையும் பெற்றனர்.
பரிசுகள்
சிறிய மாடு பிரிவில், குண்டேந்தல்பட்டி லயா நாச்சியார் முதல் பரிசும், 2-வது மற்றும் 3-வது பரிசுகளை தேவரம்பூர் ராமநாதனும், 4-வது பரிசை பொய்க்கரைப்பட்டி பாலுவும் பெற்றனர்.
இப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. சாரதிகளுக்கு கொடி பரிசும், சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராமத்தார் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
இப்பந்தயத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.