சனி பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


சனி பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சனி பிரதோஷத்தையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

சனி பிரதோஷத்தையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, அதிகார நாகராஜர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள். இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் அருகே உள்ள மலை மேல் கைலாசநாதர் கோவில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோல், போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சனி மகா பிரதோஷ பூைஜ நடந்தது. இதையொட்டி, சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் 4 முகங்கள் கொண்ட பிரம்மாவை போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் போடி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story