ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தேனி

ஆடி மாதம் முதல் வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். மேலும் கோவில்களில் கூழ் காய்ச்சி வழங்கப்படும். அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 16 வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் விளக்கேற்றி, கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்து பக்தா்களுக்கு வழங்கினர்.

சிறப்பு பூஜை

மேலும் பத்ரகாளிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில், உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி, கன்னிகா பரமேஸ்வரி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

கம்பம் கவுமாரியம்மன்கோவில், அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிமாவு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவில், பெரியகுளத்தில் கம்பம் சாலையில் உள்ள காளியம்மன், தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் மற்றும் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story