உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தையொட்டி தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது
தேனி
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தையொட்டி தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் காயத்ரி, பட்டிமன்ற பேச்சாளர் மாரிமுத்து, திண்ணை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story