உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


உலக மக்கள்தொகை தினத்தையொட்டி  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ரதம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ரதம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கலெக்டர் தலைமையில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தின் பயணத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் அன்புச்செழியன், மருத்துவம் மற்றும் ஊரக நல இணை இயக்குனர் டாக்டர் பரிமளாசெல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story