கம்பத்தில் நாய் கடித்து 8 பேர் படுகாயம்
கம்பத்தில் நாய் கடித்து 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கம்பத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. இதனால் வெளியே நடமாடவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். இந்நிலையில் இன்று நாய் ஒன்று தெருதெருவாக சுற்றி திரிந்தது. அந்த நாய் கம்பம் மாரியம்மன் கோவில் தெரு, கொண்டி தொழு தெரு, கிராமச் சாவடிதெரு, தியாகி வெங்காடச் சலம் தெரு, பார்க் ரோடு பகுதியில் நடந்து சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளது. இதில் கம்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 33), பழனிக்குமார் (37), அய்யணன் (21), பூங்குலழி (42), கிரிஷ்காந்த் (32), குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கணேசன் (40), முத்துலாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (34), சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த அனிதா ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பெற கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துப்பரவு பணியாளர்கள் வந்து பொதுமக்களை கடித்த நாயை பிடித்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து பொதுமக்களை நாய் கடித்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியது.