கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி


கம்பத்தில்  கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

கம்பத்தில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது

தேனி

கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாள் கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதிநாளான நேற்று கம்பராயர் பெருமாள், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் ஓவியம், பேச்சு, நடனம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளான போக்குவரத்து சிக்கனல், காந்தி சிலை, தியாகி வெங்காடசலம் தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் வழியாக உலா வந்தார். பின்னர் வேலப்பர் கோவில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி மற்றும் உறியடி நிகழ்ச்சி அதிகாலை வரை நடைபெற்றது.


Next Story