கம்பத்தில்புறவழிச்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
கம்பத்தில் புறவழிச்சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
தேனி
கம்பம் மேற்கு பகுதியில் புதுப்பட்டி-கூடலூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் கேரளா-தமிழகம், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் அனைத்து கனரக வாகனங்கள், ஜீப், மோட்டார் சைக்கிள், சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையின் இரு புறங்களிலும் காய்கறி, வாழை மர கழிவுகள், கட்டுமான கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இந்த கழிவுகள் காற்றில் பறப்பதால் சாலையில் எதிர் திசையில் வருபவர்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றவும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story