கம்பத்தில்ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்


கம்பத்தில்ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 42). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு 16 வயது சிறுவன் வந்தான். அவன் முகமது அலியிடம் தலைக்கறி மற்றும் புரோட்டா கேட்டான். அப்போது கடையில் புரோட்டா தீர்ந்து விட்டதாக முகமது அலி கூறினார். அதற்கு அந்த சிறுவன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முகமது அலி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.


Next Story