கம்பத்தில் 2-ம் போக சாகுபடிக்கு நெல் நடவு பணி தீவிரம்


கம்பத்தில்   2-ம் போக சாகுபடிக்கு நெல் நடவு பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:47 PM GMT)

கம்பத்தில் 2-ம் போக சாகுபடிக்கு நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை ஆண்டு தோறும் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் ஜீன் மாதம் முதல் போக சாகுபடி தொடங்கி அக்டோபர் மாதம் அறுவடை பணிகள் முடிந்தன.

இதனை தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையில் போதுமான நீர் இருப்பு இருந்து வந்ததால் 2-ம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கு நிலத்தை டிராக்டர்கள் மூலம் உழுது நாற்றங்கால் அமைத்து வருகின்றனர். கம்பத்தில் இருந்து காமயநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் பகுதியில் வயல்களில் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Related Tags :
Next Story