கம்பத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு இசை போட்டி


கம்பத்தில்  ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு இசை போட்டி
x

கம்பத்தில் ஒலிபெருக்கி உரிமையாளா்களுக்கு இசை போட்டி நடந்தது

தேனி

கம்பம் நகரில் மணிகட்டி ஆலமரம் செல்லும் சாலையில் கம்பம் வட்டார ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி திருவிழா நடந்தது. இந்த இசை போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ஒலிபெருக்கிகளை திறந்தவெளியில் அமைத்து பாடல்களை ஒலிபரப்பினர். அப்போது எந்த ஒலி பெருக்கிகளில் இருந்து அதிக சத்தம் மற்றும் இசை தெளிவாக ஒலித்ததோ, அந்த ஒலிபெருக்கி உரிமையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து ஒலிபெருக்கி உரிமையாளர் சங்க நிர்வாகி கூறுகையில், போட்டியில் கலந்து கொள்ளும் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் தங்களது ஒலிபெருக்கியை திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள பந்தய எல்லையில் கட்டி பாடல்களை ஒலி பரப்ப வேண்டும். இதில் யாருடைய ஒலிபெருக்கியில் அதிக தூரத்திற்கு தெளிவான பாடல் கேட்கிறது என்பதை வைத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 5 சுற்றுகள் முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்றார்.


Next Story