கம்பத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி


கம்பத்தில்  உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி
x

கம்பத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

கம்பத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் அனைத்து துறை தொடர்பாக இணையதளத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்படுத்துவது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோதண்டபாணி, சிவக்குமார், பால்பாண்டியன், மாரியப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள் அ.மொக்கப்பன், செல்லையா பொன்னுத்தாய், நாகமணி வெங்கடேசன், பொன்னுத்தாய் குணசேகரன், சாந்தி பரமன் மற்றும் துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், வேளாண்மை, குடிநீர் வழங்கல், உணவு வழங்கல், தோட்டக்கலை உள்ளிட்ட 10 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story