ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
குன்னூர் ரெயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நீலகிரி
குன்னூர்,
கேரள மாநில மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை, ஓணம் பண்டிகை ஆகும். குறிப்பாக 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதில் அத்தப்பூ கோலப்போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஓணம் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி குன்னூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் சார்பில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ரெயில் நிலைய வளாகத்தில் பெண்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலம் போட்டு அசத்தினர். பின்னர் ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் பாடல் பாடினர். தொடர்ந்து ஓணத்தையொட்டி லோகோ பணிமனை முன்பு பாரம்பரிய கேரள உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு, அத்தப்பூ கோலத்தை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story