தூய்மை பணியாளர்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், மோகன் குமாரமங்கலம், யூனியன் கவுன்சிலர் கங்காதரன், துணைத் தலைவர் ரெஜிமாத்யூ, ஊராட்சி செயலாளர் சோனி ஷாஜி, வார்டு உறுப்பினர் ஸ்ரீஜேஷ், சிக்மாரி, ஸ்ரீஜா, பீனா, பிந்து, வேலு, சத்யன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பாயாசம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story