ஓணம் பண்டிகை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு


ஓணம் பண்டிகை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு நாளை தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகை கேரளாவில் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு நாளை தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story