விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

புதுச்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே உள்ள கஞ்சநாயக்கனூரில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து கைகலப்பில் முடிந்தது. அதில் படுகாயம் அடைந்த விவசாயி பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். மேலும் பழனிசாமியின் மகன் சரவணன் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் நேற்றுமுன்தினம் எடையப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் துரைராஜ், கூலித்தொழிலாளி சந்துரு ஆகியோரை கைது செய்திருந்தனர். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய குணா (வயது 22) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story