கந்துவட்டி புகாரில் மேலும் ஒருவர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி புகாரில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கந்துவட்டி தொடர்பான புகார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 24 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 6 புகார் மனுக்கள் மீது 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் சேகர், அன்பரசு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு கடனாக பெற்ற ரூ.1½ லட்சத்திற்கு கந்துவட்டி கேட்டதாக கருப்பன் (வயது 77) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கந்துவட்டி புகாரில் கைதான நபர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story