கொ.ம.தே.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


கொ.ம.தே.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

பள்ளிபாளையம் கொ.ம.தே.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே பாதரை கொ.ம.தே.க. நிர்வாகியும் நிதி நிறுவன அதிபருமான கவுதம் கொலை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் ஒட்டன்மெத்தை ரோட்டில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் ஜீப்பை கண்டதும் வாலிபர் ஒருவர் பதுங்கியதை பார்த்தனர். அதை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் போலீசாருடன் விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் வெப்படையை சேர்ந்த தனபால் மகன் தியாகு (வயது 27) என்றும் தற்போது சேலத்தில் வசித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீபனும், தியாகுவும் நண்பர்கள் என தெரிந்தது. தீபன் அழைத்ததால் கவுதம் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. தியாகுவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இன்னும் சிலரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story