காரை எரித்த வழக்கில் ஒருவர் கைது


காரை எரித்த வழக்கில் ஒருவர் கைது
x

வள்ளியூரில் காரை எரித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இரவு தனது வீட்டு முன்பு காரை விட்டு விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது கார் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story