ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டும்-அர்ஜூன் சம்பத் பேட்டி


ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டும்-அர்ஜூன் சம்பத் பேட்டி
x

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை உடைத்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான 2 நீதிபதிகளின் தீர்ப்பு விசித்திரமான வியப்பு அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. வருகிற ஜூலை 15-ந் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க, மு.க.ஸ்டாலின் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும். அணை கட்டுவதை நிறுத்தாவிட்டால், பெங்களூருவில் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் நிபந்தனை விதிக்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். `நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் வந்தவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் விஜய் கொடுக்கவில்லை. வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல், 2016-ம் ஆண்டு தேர்தல் போன்று மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story