கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரமோற்சவம்
கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரமோற்சவம் நடைபெற்றது.
கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலை குடியிருப்பு வளாகத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஏகதின பிரமோற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது. காலை 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8.15 மணிக்கு சேஷ வாகனத்திலும், 9.15 மணிக்கு இந்திர விமான வாகனத்திலும், 10.45 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 12 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 3.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 4.45 மணிக்கு குதிரை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், இரவு 7.15 மணிக்கு கருட வாகனத்திலும் ராமர் எழுந்தருளி வீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலை தலைவர் விநாயகமூர்த்தி, துணை பொது மேலாளர் சுப்பையா, மூத்தமேலாளர்கள் ரமேஷ் பாபு, கல்யாணராமன் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி புறப்பாடு ராமானுஜ பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.