நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேருக்கு ஒரு நாள் சிறை


நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேருக்கு ஒரு நாள் சிறை
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேருக்கு ஒரு நாள் சிறை

கோயம்புத்தூர்

கோவை

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.12 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேருக்கு ஒரு நாள் சிறை தண்டனை வழங்கி கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதிக வட்டி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்கள் சிவசாமி (வயது 57), பெரியசாமி (58). இவர்கள் உள்பட 5 பேர் சேர்ந்து அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர். அவர்கள் தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய் தால் அதிக வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பிய ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களின் பணத்திற்கு வட்டி அளிக்கவில்லை. மேலும் அவர்களின் முதலீட்டு தொகையைும் திருப்பி அளிக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூ.12 கோடி மோசடி

போலீசார் விசாரணையில் அவர்கள் அதிக வட்டி தருவதாக கூறி கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 186 பேரிடம் இருந்து ரூ.12 கோடியே 1 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நிதி நிறுவன பங்குதாரர்கள் சிவசாமி, பெரியசாமி, துரைசாமி, முத்துச்சாமி, ஹேமலதா ஆகியோர் மீது கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டு (டான்பிட்) வழக்கு தொடர்ந்தனர்.

கோர்ட்டில் வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போது, நிதி நிறுவன பங்குதாரர்கள் முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பி செலுத்தினர். இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

ஒரு நாள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, நிதி நிறுவன பங்குதாரர்கள் சிவசாமி, பெரியசாமி ஆகிய 2 பேருக்கு கோர்ட்டு கலையும் வரை ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

துரைசாமி, முத்துச்சாமி, ஹேமலதா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்து விஜயன் ஆஜராகி வாதாடினார்.


Next Story