நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த அலுவலக உதவியாளர் சாவு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்  மயங்கி விழுந்த அலுவலக உதவியாளர் சாவு
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த அலுவலக உதவியாளர் சாவு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 56). இவர் படைவீடு பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் அலுவலக உதவியாளருக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் நேற்று ஆனந்தனுக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது.

இதனால் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகம் வந்த ஆனந்தன், கூட்ட அரங்குக்கு வெளியே உள்ள பெஞ்சில் அமர்ந்து இருந்தார். சுமார் 11 மணி அளவில் அவர் திடீரென மயங்கினார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story